அபி நந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததா பாகிஸ்தான் உளவு அமைப்பு..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறை பிடித்து வைத்திருந்தபோது அதன் உளவு அமைப்பு அவரை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபி நந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததா பாகிஸ்தான் உளவு அமைப்பு..?

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்த பாகிஸ்தானின் விமானத்தைத் துரத்திச் சென்றபோது, அபிநந்தன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்க நேர்ந்தது. அதனால் பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறை பிடித்தது. இஸ்லாமாபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் 58 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டிருந்தபோது அவர், அந்நாட்டு ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல ஒரு வீடியோவும், பாகிஸ்தான் ராணுவத்தைப் புகழ்ந்து பேசுவது போல ஒரு வீடியோவும் வெளியானது. பின்னர் அதில் இரண்டாவது வீடியோ போலியானது எனத் தெரியவந்தது.

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருந்தபோது, அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அபிநந்தனை சுமார் 40 மணி நேரம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

INDIA, PAKISTAN, ABHINANDAN