இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து நோயாளிகளின் சிகிச்சை காலத்தை குறைக்க மட்டுமே செய்கிறது, ஆனால் இறப்பை தடுப்பதில் எந்த நன்மையும் செய்யவில்லை என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பயன்படத்தப்படும் ரெம்டெசிவிர், மருத்துவமனையில் நோயாளிகள் தங்கும் காலத்தை குறைக்க உதவுகிறது. ஆனால் இறப்புகளை தடுப்பதில் நன்மை பயக்கவில்லை. எனவே இந்த மருந்துகள் பயனுள்ளதாக இல்லையா என்பதை குறிப்பிட எங்களுக்கு கூடுதல் தரவு தேவை" எனக் குறிப்பிட்டள்ளார்.

மேலும், "தற்போது பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) உள்ளது. அது குறித்தும் சர்ச்சை உள்ளது. ஆனால் நோயின் ஆரம்ப காலத்தில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

அவசரகால பயன்பாட்டுக்கு மட்டும் ரெம்ட்சிவிர் பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர்த்து பிளாஸ்மா சிகிச்சை, ஆராய்ச்சியிலும், சந்தையிலும் கிடைக்கக் கூடிய வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்ட மறுஉருவாக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்த ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள உயிர்காக்கும் சிகிச்சையாக ஆக்சிஜேனற்றம் முறை சிறப்பான பயனளிப்பதாக கூறப்படுகிறது. 90 முதல் 95% நோயாளிகள் இதன் மூலம் குணமடைந்து நலமுடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்