இந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவுனதுக்கு இதுதான் காரணம்.. உலக சுகாதார நிறுவனம் கடுமையாக சாடல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவியதற்கான காரணம் என்னவென்று உலக சுகாதார நிறுவனம் விளக்கியுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளர்.
இந்தியாவில், கொரோனா முதல் அலையின் போது ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், இரண்டாவது அலையில் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், தற்போது நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் மறுபடியும் கொரோனா தொற்று அதிகரித்ததற்கான காரணம் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) விளக்கியுள்ளது. அதில், ‘கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் B.1.617 வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் காணப்பட்டது. தற்போது இந்த வைரஸ் மீண்டும் எழுச்சிபெற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவியதற்கு அரசியல் நிகழ்வுகளும், மதம் சார்ந்த கூட்டங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல் பொதுச்சுகாதாரம் தொடர்பான குறைவான புரிதலும் இதற்குக் காரணமாக இருக்கலாம்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்