‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு நிவாரணத்தொகையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.500 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியை தருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதற்காக ‘பிஎம் கேர்’ என்ற தனி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் நிதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ.500 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நிதியாக அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிஎம் கேருக்கும் 500 கோடி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா ரூ.5 கோடி ரூபாய் கொரோனா நிதியாக அளிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு சுமார் 50 லட்சம் இலவச உணவுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இரண்டே வாரங்களில் தயார் செய்து தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்களுக்காக 1 லட்சம் மாஸ்குகள் தினசரி வழங்கப்படுகின்றன. கொரோனா பாதித்தவர்களை கவனித்துக்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச உடை ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகின்றன.
ஆம்புலன்ஸ் போன்ற அவரச சேவை வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருட்கள் வழங்கப்படுகின்றன. வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் மற்றும் வீட்டில் இருந்து பிற வேலைக்காக இணையதளத்தை நாடியுள்ளவர்களுக்கு ஜியோ மூலாமாக அதிக டேட்டா வழங்கப்படுகிறது. இதன்மூலம் 40 கோடி பயனடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் ரீடைல் அத்தியாவசிய சேவையாக தினமும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வீடு தேடி அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reliance Industries announces Rs 500 crore contribution to #PMCARES Fund In addition to its multi-pronged on-the-ground fight against Covid-19 #RIL #CoronaHaaregaIndiaJeetega pic.twitter.com/06Rsm4XLaX
— Reliance Foundation (@ril_foundation) March 30, 2020
#RIL continues its 24x7, multi-pronged, on-the-ground effort to do its bit to ensure the nation remains prepared, fed, supplied, safe, connected and motivated to fight & win against the
unprecedented challenges brought upon by the Coronavirus pandemic #CoronaHaaregaIndiaJeetega pic.twitter.com/JBwSNi3Gfy
— Reliance Foundation (@ril_foundation) March 30, 2020