'சொன்னா கேக்க மாட்ட?'.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு, குற்றவாளிகளால் நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண் ஒருவரின் தரப்பில் இருந்து, இந்த நிலைக்கு அப்பெண்ணை ஆளாக்கியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமினில் வெளிவந்ததை அடுத்து, அப்பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்பெண் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பல் மீது புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை வாபஸ் பெறச் சொல்லி அந்த கும்பல், அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்தது. ஆனால் அப்பெண் வழக்கை வாபஸ் பெறாததால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண் மீது ஆசிட் வீசிச் சென்றுள்ள சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
ஆசிட் வீசிய நபர்களை தேடி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.