'சூப்பர்' நியூஸ் சொன்ன சுகாதாரத்துறை... குறிப்பா 'இந்த' மாநிலங்கள் எல்லாம் வேற லெவலாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட அதில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 6.73 லட்சம் பேர் இன்று வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரம் கொரோனாவில் இருந்து 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதத்தில் தேசிய சராசரியை விட, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தோர் விகிதம் அதிகளவில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இவற்றில் சண்டிகர் (85.9), லடாக் (82.2), உத்தரகாண்ட் (80.9), சத்தீஸ்கர் (80.6), ராஜஸ்தான் (80.1) ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்