'இதை ஏன் கண்டுக்கவே இல்ல'...'மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஊழியர்'...சர்ச்சையில் 'இன்ஃபோசிஸ்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரையடுத்து பங்குகளின் விலை ஒரே நாளில் கடும் சரிவை கண்டது. இதையடுத்து அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் இன்ஃபோசிஸ் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

'இதை ஏன் கண்டுக்கவே இல்ல'...'மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஊழியர்'...சர்ச்சையில் 'இன்ஃபோசிஸ்'!

தற்போது நிறுவனத்தில் சூறாவளியை கிளப்பியிருப்பவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில்  ஃபைனான்ஸ் துறையில் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டாலும், தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை. தான் யார் என்பதை வெளிப்படுத்தினால் தன் மீதும் நடவடிக்கை பாயும் என்பதால் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை என கூறியுள்ளார். அந்த ஊழியர் தெரிவித்துள்ள புகாரில், ''இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக், நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்து 20 மாதங்கள் ஆனபோதும், பெங்களூரு அலுவலகத்திலிருந்து பணியாற்றாமல், மும்பையிலிருந்தபடியே பணியாற்றுகிறார்.

இது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். பரேக் பெங்களூருவுக்கு வரும்படி இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு வலியுறுத்தாமலிருப்பதன் காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மும்பையிலிருந்து வழிநடத்துவதால்  இரு நகரங்களுக்குமிடையே பயணிப்பதற்காக மட்டும் இதுவரை 22 லட்சம் ரூபாய்வரை செலவிடப்பட்டுள்ளது'' என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மீண்டும் இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தப் புகாரின்மீது விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி அந்த நிறுவன ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

INFOSYS, WHISTLEBLOWER, CEO, FINANCE DEPARTMENT, SALIL PAREKH