'3 மாதத்திற்கு கடன் தவணைகள் செலுத்த தேவையில்லை!'... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வங்கிகளில் கடன் பெற்றோர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டுவது ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வு வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

'3 மாதத்திற்கு கடன் தவணைகள் செலுத்த தேவையில்லை!'... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றோர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்ட தேவையில்லை. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இ.எம்.ஐ கட்ட வேண்டிய அவசியமில்லை. அது ஒத்திவைக்கப்படுகிறது. கடன் வழங்குவதை எந்த காரணத்திற்காகவும் வங்கிகள் குறைத்து விடக்கூடாது. ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்" என்றார்.

 

RBI, CORONA, CORONAVIRUS, RATES, LOANS