குஜராத் தேர்தல் : முதல் தேர்தலில் சாதித்தாரா ரவீந்திர ஜடேஜா மனைவி?.. வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தற்போது காயம் காரணமாக சில தொடர்களில் இருந்து விலகி உள்ளார். விரைவில் அதிலிருந்து பூரண குணமடைந்து அடுத்து வரும் தொடர்களில் நிச்சயம் ஆடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில், ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் இது தொடர்பான வாக்கு எண்ணிக்கைகள் தற்போது வெளியாகி உள்ளது.
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்படி ஒரு சூழலில், 2022 குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பும் ரிவாபாவுக்கு கிடைத்தது. அதன்படி, குஜராத் சட்டசபையின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் முன்னிலை பெற்று ரிவாபா வெற்றி பெற்றதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. 15 சுற்றுகள் முடிவில், சுமார் 70,000 வாக்குகள் பெற்ற ரிவாபா, தனது போட்டியாளரை விட 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். முன்னதாக, வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் சற்று பின்தங்கி இருந்த ரிவாபா, அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று வெற்றியும் பெற்றுள்ளார்.
தேர்தலில் களமிறங்கிய முதல் முறையிலேயே அதில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக நியமிக்கப்பட உள்ள ரிவாபா ஜடேஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்