பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ரவீந்திர ஜடேஜா மனைவி.. எந்த தொகுதி? மோடிக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்த ஜட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மனைவி பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ரவீந்திர ஜடேஜா மனைவி.. எந்த தொகுதி? மோடிக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்த ஜட்டு!

Also Read | தமிழில் பேசி அசத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் கான்.. ஶ்ரீகாந்த் & பாவனா செய்த கலாட்டா! வைரல் வீடியோ 🤣

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தற்போது காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பைத் தொடரில் தேர்வாகவில்லை.

முன்னதாக, இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தொடருக்கு நடுவே கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.

இச்சூழலில் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, 2022 ஆம் ஆண்டுக்கான குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

Ravindra Jadeja wife Rivaba contesting the Gujarat assembly election

2022 குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி (BJP) வெளியிட்டுள்ளது, இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பெயர் இடம்பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலின்படி, குஜராத் சட்டசபையின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா & அவருடைய மனைவி ரிவாபா ஜடேஜா இருவரும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Ravindra Jadeja wife Rivaba contesting the Gujarat assembly election

32 வயதாகும் ரிவாபா ஜடேஜா 2018 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இந்த ஆண்டு முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

ரிவாபா ஜடேஜா,  வலதுசாரி அமைப்பான கர்னி சேனாவின் பெண்கள் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரவீந்திர ஜடேஜா, மனைவி ரிவாபா ஜடேஜாவை வாழததியுள்ளார். மேலும் பாஜகவின் மூத்த தலைவர்களான நரேந்திர மோடி & அமித்ஷாவிற்கு ஜடேஜா நன்றி கூறியுள்ளார்.

 

Also Read | இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் பாரதப் பிரதமர் மோடி!.. பிரபல தமிழக பல்கலைக்கழகத்தில் விழா!

RAVINDRA JADEJA, GUJARAT ASSEMBLY ELECTIONS, RAVINDRA JADEJA WIFE RIVABA, BJP

மற்ற செய்திகள்