"International கிரிக்கெட்டுக்கே Tough குடுப்பாங்க போலயே".. அஸ்வின் பகிர்ந்த வீடியோ.. "Replay ஓடுற இடம் தான் அட்டகாசம்"
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக அளவில் கொண்டாடப்பட்டும் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய அணி மோதும் போட்டிகள் என வந்து விட்டாலே, ஒரு பந்துகளை கூட தவற விடாமல் பார்க்கும் ரசிகர்கள் கூட ஏராளமாக உள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பதுடன் மட்டுமில்லாமல், இந்தியாவை சுற்றியுள்ள பல இடங்களில் இருந்தும் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என ஏராளமான இளைஞர்கள் முயற்சி செய்தும் வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, பொழுது போக்கிற்காக பல இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதைக் காணலாம். கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை பல இடங்களில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடியும்.
இப்படி இந்திய மக்கள் மத்தியில் கிரிக்கெட் என்பது அதிகம் ஒன்றிப் போன விஷயமாக பார்க்கப்படும் நிலையில், பலரும் ஜாலியாக கிரிக்கெட் ஆடுவது தொடர்பான வீடியோக்கள் வைரல் ஆவதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வேடிக்கையான வீடியோ ஒன்றில், சிறுவர்கள் செய்யும் சேட்டை தொடர்பான விஷயம், கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த வீடியோவில், கிரிக்கெட் போட்டிகளில் வருவது போலவே, சிறுவர்கள் அனைவரும் இருக்க, கிரிக்கெட் பந்துக்கு பதிலாக குட்டி சிறுவன் வேகமாக ஓடி பேட்ஸ்மேனை நோக்கி செல்கிறார். நேராக பேட்ஸ்மேன் கால் பகுதியில் பந்து போல மோத, எல்பிடபுள்யூ என வீரர்களும் அப்பீல் செய்கின்றனர். உடனடியாக, நடுவரும் அவுட் கொடுக்க, DRS அப்பீல் செய்கிறார் பேட்ஸ்மேன்.
கிரிக்கெட் போட்டியில் வருவது போலவே, வீசிய பந்து மீண்டும் ரிப்ளே காட்டுவது போல, ஸ்லோ மோஷனில் அந்த குட்டி சிறுவன் பந்து போல ஓடி மீண்டும் சரி பார்க்கப்பட, கடைசியில் மூன்றாம் நடுவர் முடிவும் அவுட் என வருகிறது. மேலும் இந்த வீடியோவின் பின்னால் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேசுவதும் இணைக்கப்பட்டுள்ளது.
பந்தாக சிறுவன் மாறியது தொடங்கி, கிரிக்கெட்டில் வரும் Replay வரை சிறுவர்கள் அசத்தலாக உருவாக்கி உள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த வீடியோவை பகிர்ந்து, "ஹாஹாஹா 👏👏👏" என குறிப்பிட்டுள்ளார்.
Hahahaha👏👏👏 https://t.co/egliUdaqSV
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 1, 2022
Also Read | மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!
மற்ற செய்திகள்