'பிறந்து 2 வாரம் தான் ஆச்சு'... 'இது என்ன பாம்புன்னு தெரியுமா'?... ஆச்சரியத்தில் உறைந்து போன வனத்துறை அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரியவகை இரண்டு தலை பாம்பு பிடிப்பட்டுள்ள சம்பவம் வனத்துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரியவகை இரண்டு தலை பாம்பு ஒன்று அங்குள்ள விகாஸ் நகர்ப் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்கூட வளாகத்தில் இருப்பதைப் பார்த்த தொழிலாளர்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக வனத்துறையின் பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்த அடில் மிர்சாவை அழைத்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அடில் மிர்சா, அந்த பாம்பைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போனார். காரணம் அது இரண்டு தலை கொண்ட நாகப்பாம்பு ஆகும். இதுகுறித்து பேசிய அடில் மிர்சா, ''15 ஆண்டுக் காலம் பாம்புகளைப் பிடிக்கும் பணியைச் செய்து வருகிறேன். எனது பணி அனுபவத்தில் இரண்டு தலை கொண்ட நாகப்பாம்பைப் பார்ப்பது இதுவே முதல் முறை'' எனத் தெரிவித்தார்.
ஒன்னரை அடி நீளம் இருந்த அந்த பாம்பு பிறந்து இரண்டு வாரமான குட்டி என அடில் தெரிவித்துள்ளார். அந்த பாம்பு தற்போது டேராடூனில் வனவிலங்கு பூங்காவில் பத்திரப் படுத்தப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் அதைப் பரிசோதித்து வருகின்றனர். அது முடிந்த பிறகு ஆய்வுக்காக அதை ஆய்வுக் கூட்டத்தில் வைப்பதா? இல்லை வனத்தில் விடுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்