'அரிதான ஜீனியஸ்! உலகத்துல 1 %க்கும் குறைவானோர்தான் இதை செய்றாங்க!'.. சுஷாந்தின் சகோதரி வெளியிட்ட 'கண்கலங்க வைக்கும்' இன்ஸ்டாகிராம் வீடியோ!..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

'அரிதான ஜீனியஸ்! உலகத்துல 1 %க்கும் குறைவானோர்தான் இதை செய்றாங்க!'.. சுஷாந்தின் சகோதரி வெளியிட்ட 'கண்கலங்க வைக்கும்' இன்ஸ்டாகிராம் வீடியோ!..

பின்னர் சுஷாந்த் மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவரிடம் சென்றுவந்ததில் தொடங்கி, சுஷாந்தின் மேனேஜர் தற்கொலை, பாலிவுட்டில் தொடர்ச்சியாக சுஷாந்த் மீது தொடுக்கப்பட்ட நெப்போட்டிசம் தாக்குதல், நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வங்கிக் கணக்குக்கு சுஷாந்தின் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தது வரை பல்வேறு விஷயங்கள் , சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சந்தேகத்தை எழுப்பியது.

அதன் பின்னர் ரியா தொடர்ச்சியாக விசாரிகப்பட்டபோது, சுஷாந்தின் மீது போதை மருந்துகளை பயன்படுத்தியதற்கான வாட்ஸ் ஆப் உரையாடல் ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே சுஷாந்தின் வழக்கு சிபிஐக்கு மாறி தீவிரமாக விசாரிக்கப்பட்டு ரியாவின் மீது கிரிமினல் வழக்கும் பதியப்பட்டு தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும், அவரின் தற்கொலை மர்மம் விலக்கப்பட்டு நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்கிற கங்கனா ரனாவத் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் தொடர் அழுத்தம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சுஷாந்தின் சகோதரி ஸ்வெதா சிங் கீர்த்தி, சுஷாந்த் இரண்டு கைகளாலும் எழுதும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதுடன், ambidexterity-mirror writing என்று கூறப்படும் இந்த செயல்பாட்டை உலகின் மொத்த மக்கள் தொகையில் 1 %க்கும் குறைவானோரே  செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன், #MyBrotherTheBest #JusticeForSushantSinghRajput #GlobalPrayersForSSR என்கிற ஹேஷ்டேகுகளையும் இணைத்துள்ளார்.

 

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஆச்சரியத்துடன் கண் கலங்குகின்றனர். காரணம், சுஷாந்த் தன் இரண்டு கைகளாலும் “NOTHING IMPOSSIBLE” என்று எழுதுகிறார். பலருக்கும் தன்னம்பிக்கையூட்டக்கூடிய இந்த வாசகத்தின் தமிழ் அர்த்த, “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!” என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்