முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்... 'சீனா' மறுபடி வாலாட்டுனா... பாதுகாப்புத்துறை 'அதிரடி' முடிவு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கல்வான் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையிலான பிரச்சினை 'நீறு பூத்த நெருப்பாக' உள்ளது. எந்த நேரமும் எல்லையில் பிரச்சினை வெடிக்கலாம் என்ற நிலை இருப்பதாலும், நமது இராணுவத்தினர் 20 பேர் சீனாவின் அத்துமீறலுக்கு பலியாகி இருப்பதாலும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்... 'சீனா' மறுபடி வாலாட்டுனா... பாதுகாப்புத்துறை 'அதிரடி' முடிவு?

இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா விவகாரத்தில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து இருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தரை, வான்வெளி, கடல் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ராணுவ உயரதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு படை வாகனங்களுக்கு தேவையான எரிபொருட்களை கூடுதலாக கையிருப்பில் வைக்கும் நடவடிக்கையும் தீவிரம் அடைந்துள்ளது.

மற்ற செய்திகள்