'அவன் என் கூட சண்ட போட்டது மட்டுமில்லாம... தரதரனு இழுத்துட்டு போய்... டெம்போ'ல வச்சு...' - "பெத்த புள்ளய ஒரு 'அப்பன்' செய்ற காரியமா இது?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனைவியுடன் சண்டை போட்ட கணவன், பெற்ற மகளை குடி போதையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அவன் என் கூட சண்ட போட்டது மட்டுமில்லாம... தரதரனு இழுத்துட்டு போய்... டெம்போ'ல வச்சு...' - "பெத்த புள்ளய ஒரு 'அப்பன்' செய்ற காரியமா இது?"

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே இச்சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதி, சில தினங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் சண்டையிட்டுள்ளனர். அதனால், அந்த பெண் கணவனைப் பிரிந்து, தன்னுடைய தாயார் வீட்டுக்கு 7 வயது மகளுடன் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, குடிபோதையில் இருந்த கணவன், மாமனார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் ரகளை செய்துள்ளான்.

அதன் பின்னர், கோபமடைந்த அவன், மனைவியை அவர் சகோதரன் கடையில் இருக்கச் சொல்லிவிட்டு, மகளை தனியாக தன்னுடன் இழுத்துச் சென்றுள்ளான். போதை தலைக்கேறியதால் அருகிலிருந்த டெம்போவில் பெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

கிழிந்த ஆடையில் ரத்தக் கறை படிந்த நிலையில், சிறுமி அங்கிருந்து எப்படியோ தப்பித்து தன் தாயிடம் சென்றடைந்துள்ளார். மேலும், நடந்தவற்றை அனைத்தையும் தன் தாயிடம் சொல்லி கதறியுள்ளார் சிறுமி.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் போலீஸிடம் புகார் அளித்தார். 36 வயதான அந்த குடிகாரன் மீது, போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

TRENDING NEWS

மற்ற செய்திகள்