திருடிய இடத்தில் ஃபீல் பண்ணி திருடன் எழுதி வெச்ச கடிதம்.. படிச்சிட்டு ஓனரே கலங்கிட்டாரு..! என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

திருடிய இடத்தில் ஃபீல் பண்ணி திருடன் எழுதி வெச்ச கடிதம்.. படிச்சிட்டு ஓனரே கலங்கிட்டாரு..! என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!

இயல்பாக நடைபெறும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு ஏதாவது நிகழ்வு நடைபெறும் போது அவை மக்கள் மத்தியில் கவனத்தை உருவாக்கி, பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறும்.

அதிலும் குறிப்பாக, ஏதேனும் திருட்டு சம்பவங்கள் நிகழும் போது அதில் ஏதாவது பரபரப்பான விஷயங்கள் நடைபெறுவதையும் நாம் நிறைய கடந்து வந்திருப்போம்.

சிசிடிவியை பார்த்து கொள்ளையர்கள் பதுங்குவது, வீட்டை உடைக்க முடியாமல் அதிருப்தியில் திருடர்களில் செல்வது என திருட்டு குறித்து நடைபெறும் பல்வேறு வித்தியாசமான விஷயங்கள் அதிகம் வைரலாகும். அந்த வகையில், ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Rajasthan thief letter to owner after steal money in shop

Images are subject to © copyright to their respective owners.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் அமைந்துள்ள பனியானா என்னும் பகுதியை சேர்ந்தவர் கோமாராம். இவர் அதே ஊரில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பாக தனது கடையை திறப்பதற்காக வழக்கம் போல கோமாராம் சென்றுள்ளார். ஆனால், கடைக்குள் இருந்த இனிப்புகள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் கோமாராம்.

அதுமட்டுமில்லாமல், கடையின் கல்லாவில் இருந்து சுமார் 7000 ரூபாய் பணம் திருட்டு போனதை அறிந்து இன்னும் பதற்றம் அடைந்துள்ளார். இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் அங்கு வந்து சோதனை மேற்கொண்ட போது கடையின் உரிமையாளருக்காக திருடன் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கி உள்ளது.

Rajasthan thief letter to owner after steal money in shop

Images are subject to © copyright to their respective owners.

அதிலிருந்த வார்த்தைகள் தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது பெரிய அளவில் இணைவாசிகள் கவனம் பெற்று வருகிறது.

"சார் எனக்கு நல்ல மனசு இருக்கிறது. நான் உங்கள் கடையில் திருடுவதற்காக நுழையவில்லை. நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. கடும் பசியால் தான் கடைக்குள் நுழைந்தேன். நீங்கள் ஏழை என்று தெரியும். அதனால் ஆறுதலுக்காக இந்த கடிதத்தை எழுதி வைக்கிறேன். அதுபோல இங்கு திருடும் போது கால்களில் காயம் ஏற்பட்டது. அதனை சரிசெய்ய பணம் தேவைப்படுவதால் உங்கள் கல்லாவில் இருந்த 7000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டேன்.

நான் பெரிதாக ஒன்றும் சாப்பிடவில்லை. நான்கு இனிப்புகளை மட்டும் தான் சாப்பிட்டேன். இதை நீங்கள் காவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால் நான் உங்கள் விருந்தாளி" என கடிதத்தில் திருடன் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த கடிதத்தை படித்த பின்னர் புகார் அளிக்க வேண்டாம் என கோமாரம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் காவலர் அந்த திருடன் யார் என்பது பற்றியும் தேடி வருகின்றனர்.

Also Read | "நான் உயிரோட தான் இருக்கேன்".. இறந்த கணவரை உணவகத்தில் பார்த்ததாக பெண் சொன்ன விவகாரத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..

RAJASTHAN, THIEF, OWNER, STEAL MONEY, SHOP

மற்ற செய்திகள்