“அப்படியே கூவத்தூர் சம்பவம்!.. பறிபோன துணை முதல்வர் பதவி!” ..“சத்தியத்த தொந்தரவு பண்லாம்.. தோக்கடிக்க முடியாது!”.. சூடான ராஜஸ்தான் பாலிடிக்ஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் உண்டான பிளவு ஏற்பட்டதை அடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கு இடையே எழுந்த அதிகார போட்டியினால், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டார்.
இதனிடையே கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று அசோக் கெலாட் வீட்டிலேயே நடக்க, இதில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை என்பதுடன், இக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்களும், அசோக் கெலாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன்பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் பேருந்துகளை எடுத்துக்கொண்டு ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதிக்கு சென்று தங்கினர். அதன்பின்னர் ஜெய்ப்பூரில் போர்மான்ட் ஹோட்டலில் நடைபெற்ற ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 102 எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சச்சின் பைலட்டை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இதேபோல் சச்சின் பைலட்டிற்கு ஆதரவு தெரிவித்த இரண்டு மந்திரிகளின் பதவியும் பறிக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் தனது சமூக வலைதளத்தில், “சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்