'உலகிலேயே அதிக வெப்பநிலை'... 'இந்தியாவின் பிரபல நகரம் அடிச்ச ரெகார்ட்'... கொளுத்தி தள்ளிய வெயில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோடைக் காலம் உச்சநிலையை அடைந்துள்ள நிலையில், உலகிலேயே அதிகமாக இந்தியாவில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

'உலகிலேயே அதிக வெப்பநிலை'... 'இந்தியாவின் பிரபல நகரம் அடிச்ச ரெகார்ட்'... கொளுத்தி தள்ளிய வெயில்!

மே மாதம் தொடங்கும் முன்பே கோடை வெப்பம் கொழுத்த தொடங்கியது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளான நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினார்கள். இந்நிலையில் நேற்றைய நாளுக்கான அதிக வெப்பநிலை இந்தியாவின் சுரு நகரில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ரவீந்திர சிகாக் கூறும்பொழுது, ''நாட்டின் அதிக வெப்பநிலை நேற்று ராஜஸ்தானின் சுரு நகரில் பதிவாகி உள்ளது. 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவான இந்த வெப்பநிலை, பாகிஸ்தான் நாட்டின் ஜகோபாபாத் நகரிலும் பதிவாகி உள்ளது. இதனால் நேற்றைய நாளில் உலகின் மிக அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளாக சுரு மற்றும் ஜகோபாபாத் நகரங்கள் இருந்தன'' எனத் தெரிவித்து உள்ளார்.

மற்ற செய்திகள்