RRR Others USA

"பற்றி எரிந்த வீடு".. உயிரை பணயம் வைத்து குழந்தையை மீட்ட கான்ஸ்டபிள்.. ரியல் ஹீரோப்பா.. பாராட்டிய முதல்வர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலத்தில், கலவரம் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மத்தியில் போலீஸ்காரர் ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

"பற்றி எரிந்த வீடு".. உயிரை பணயம் வைத்து குழந்தையை மீட்ட கான்ஸ்டபிள்.. ரியல் ஹீரோப்பா.. பாராட்டிய முதல்வர்

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக தற்போது அசோக் கெலாட் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், கரௌலி நகரில் திடீரென மதத்தின் பெயரில் கலவரம் வெடித்ததாக கூறப்படுகிறது.

திடீரென வெடித்த கலவரம்

முன்னதாக, ராஜஸ்தானில் இந்துக்களின் நவ் சம்வத்சர் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது, முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் நடந்துள்ளது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஆரம்பமானதாக கூறப்படுகிறது. அதே வேளையில், மோதல் காரணமாக கற்களை எறிந்து கலவரமும் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதற்கு அடுத்தபடியாக, கரௌலி பகுதியில் இருந்த பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கலவரத்தின் பெயரில் பலரும் தாக்கப்படவும் செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், இந்த விவாகரத்தில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கலவரத்தில் பற்றி எரியும் கட்டிடங்களுக்கு நடுவே, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து, குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி, அதனைக் காப்பாற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உயிரை பணயம் வைத்து..

கரௌலி பகுதியில் எரிந்து கொண்டிருந்த கட்டிடம் ஒன்றில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் மாட்டிக் கொண்டுள்ளது. அங்கிருந்த நான்கு பேரையும், அந்த போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றி உள்ளார். அந்த நபர், கரௌலி கோட்வாலி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் நேத்ரேஷ் ஷர்மா என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தை ஷாம்லியின் போலீஸ் சூப்பிரண்டு, சுக்ரிதி மாதவ் மிஸ்ரா ஐபிஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், முதல்வர் அசோக் கெலாட் கூட, நேத்ரேஷை தொலைபேசியில் அழைத்து, அவரின் வீரதீர செயலை பாராட்டி உள்ளார்.

 

கான்ஸ்டபிள் வீரதீர செயல்

இந்த சம்பவம் பற்றி பேசிய நேத்ரேஷ் ஷர்மா, "எனது உயிர் போனாலும் அந்த நான்கு பேரை காப்பாற்ற வேண்டும் என்பது என் கடமையாகவே அப்போது இருந்தது. எனது உயிருக்கு என்ன ஆகும் என்பது பற்றி யோசிக்கவும் அப்போது நேரமில்லை. அங்கு நான் சென்ற போது, குழந்தை மற்றும் பெண்களின் நிலை மோசமாக இருந்தது. குழந்தையை எனது கையில் எடுத்துக் கொண்டு, நான் முன்னே சென்ற படி, அந்த பெண்களை உடன் அழைத்துச் சென்றேன். பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பிறகு, குழந்தையை தாயின் கையில் ஒப்படைத்தேன்" என கூறியுள்ளார்.

RAJASTHAN, POLICE CONSTABLE, ASHOK GHELOT

மற்ற செய்திகள்