மிஸ்டர், உங்க 'செருப்ப' கழட்டுங்க...! 'எடுத்து கிழிச்சு பார்த்தப்போ, உள்ள இருந்து...' 'எக்ஸாம் ஹாலில் அணிந்து வந்த செருப்பில்...' - ஒரு நிமிஷம் 'ஆடிப்போன' கண்காணிப்பாளர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஆசிரியர்களுக்கான ரீட் தேர்வு நடைபெற்றது. REET என்பது (Rajasthan Eligibility Exam for Teachers) அரசுப்பணி ஆசிரியர்களாக பணிப்புரிவதற்கு ராஜஸ்தான் மாநில உயர்கல்வித் துறையால் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வு.

மிஸ்டர், உங்க 'செருப்ப' கழட்டுங்க...! 'எடுத்து கிழிச்சு பார்த்தப்போ, உள்ள இருந்து...' 'எக்ஸாம் ஹாலில் அணிந்து வந்த செருப்பில்...' - ஒரு நிமிஷம் 'ஆடிப்போன' கண்காணிப்பாளர்...!

அரசுப் பள்ளிகளில் 31,000 பணியிடங்களுக்கான இந்த தேர்வை 16 லட்சம் பேர், மாநிலம் முழுவதும் சுமார் 4,153 தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர். அதோடு, தேர்வு எழுத வருவோர் தேர்வில் முறைகேடுகள் எதுவும் செய்யாமல் இருக்க பல்வேறு இடங்களில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது.

Rajasthan man allegedly cheat a reet exam with Bluetooth slippers

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் என்ற நபர் செருப்பில் ப்ளூடுத் பயன்படுத்திக் காப்பியடிக்க முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரோடு மேலும் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வு அறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

தேர்வு எழுத வந்த அஜ்மீர் மற்றும் கூட்டாளிகள் தனது காலணியில் ப்ளூடூத் கருவியினை பொருத்தி உள்ளனர். அதோடு அவர்களின் காதுகளில் மிக சிறிய ஒரு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

Rajasthan man allegedly cheat a reet exam with Bluetooth slippers

இந்த ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டால், மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருந்த நிலையில், அவர் அங்கிருந்து கேள்வி 1க்கு A, 2க்கு D என்றெல்லாம் கூறியுள்ளனர்.

Rajasthan man allegedly cheat a reet exam with Bluetooth slippers

இந்த ப்ளூடூத் செருப்பு விலை ரூ. 6 லட்சம் ரூபாய் எனவும், இதை 25 பேர் வாங்கியுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சாதனத்தை விற்பனை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைகேடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் அதிகாரி ரத்தன் லால் பார்கவ், 'ப்ளூடூத் செருப்பு மூலம் முறைகேடு செய்த நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்வு அறைக்கு வெளியில் இருந்து யாரோ உதவியதாகவும் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறைகேடுக்கு பிறகு ரீட் இரண்டாம் கட்ட தேர்வில் தேர்வர்கள் செருப்பு அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்