VIDEO : ஆன்லைனில் நடந்த 'விசாரணை'... "அந்த ஒரு 'lawyer' மட்டும் பேப்பர வெச்சு மறைச்சு"... "என்ன பண்ணிட்டு இருக்காரு??"... வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

VIDEO : ஆன்லைனில் நடந்த 'விசாரணை'... "அந்த ஒரு 'lawyer' மட்டும் பேப்பர வெச்சு மறைச்சு"... "என்ன பண்ணிட்டு இருக்காரு??"... வைரல் 'வீடியோ'!!!

இந்நிலையில், இந்த சம்பவத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இணைய வழியாக நடைபெற்றது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேந்திர குமார் கோயல் விசாரணையை மேற்கொண்டார். மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் உள்ளிட்டோர் இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்றனர். இதில் மற்றொரு மூத்த வழக்கறிஞரான ராஜீவ் தவான் என்பவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, வழக்கறிஞர் ராஜீவ் தவான் அவ்வப்போது தனது முகத்தினை பேப்பரை கொண்டு மறைத்து கொண்டே இருந்தார். அப்போது, பேப்பர் பின்னாலிருந்து புகை வந்த வண்ணம் இருந்தது. அந்த சமயத்தில் ராஜீவ் தவான் ஹூக்கா புகைத்துக் கொண்டிருந்துள்ளார். விசாரணையின் போது, ஒரு மூத்த வழக்கறிஞர் இப்படி நடந்து கொண்டதைக் கண்டு நீதிபதி மகேந்திர குமார் அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, உங்கள் வயதை கருத்தில் கொண்டு புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது' என அறிவுரை கூறினார். அதற்கு பதில் சொன்ன வழக்கறிஞர் ராஜீவ் தவான், புகை பிடிக்கும் பழக்கத்தை விரைவில் நிறுத்தி விடுவதாக உறுதியளித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்