VIDEO: ‘24 மணிநேரமும் வேலை’.. ‘ரெஸ்டே இல்லை’.. ‘யாரும் சோர்வாகிட கூடாது’.. அசத்திய டாக்டர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸால் ஓய்வில்லாமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள் பாடல் பாடி தங்களை தாங்களே உற்சாகமாக்கி கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘24 மணிநேரமும் வேலை’.. ‘ரெஸ்டே இல்லை’.. ‘யாரும் சோர்வாகிட கூடாது’.. அசத்திய டாக்டர்கள்..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை  24 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 743 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் சோர்வடைந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பாடல்களை பாடி தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளும் வீடியோ பலரது அன்பையும் பெற்று வருகிறது.

CORONA, CORONAVIRUS, DOCTORS, VIRAL, STAYAWARESTAYSAFE