தொடர்ந்து 'அதிகரிக்கும்' கொரோனா... யாரும் உள்ள வர 'வேணாம்'... எல்லைகளுக்கு 'சீல்' வைத்த மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅடுத்த 7 நாட்களுக்கு யாரும் உள்ளே வருவதோ, வெளியில் செல்வதோ கூடாது என அறிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா (90,787), தமிழ்நாடு (34,914), டெல்லி (31,309), குஜராத் (21,014) மற்றும் ராஜஸ்தான் (11,245) ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் எல்லைகளுக்கு ஒரு வாரம் சீல் வைத்துள்ளது. இதையடுத்து எந்தவொரு நபரும் என்.ஓ.சி(நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்) இல்லாமல் மாநிலத்துக்கு உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாது என காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் ஜெனரல் எம்.எல்.லெதர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே பாஸ் வழங்க முடியும். இறப்பு, மருத்துவ தேவைகளுக்காக செல்வது போன்ற முக்கிய காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்