'பேங்க் வரப்போலாம் அவர் கையில கட்டுக்கட்டா பணம் இருக்கும்...' 'ஏற்கனவே plan-ஐ கச்சிதமாக போட்ட பேங்க் மேனேஜர்...' - சிசிடிவியில் பார்த்து மிரண்டு போன போலீசார்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தான் பணிபுரியும் வங்கியில் பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட வங்கி மேனேஜர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

'பேங்க் வரப்போலாம் அவர் கையில கட்டுக்கட்டா பணம் இருக்கும்...' 'ஏற்கனவே plan-ஐ கச்சிதமாக போட்ட பேங்க் மேனேஜர்...' - சிசிடிவியில் பார்த்து மிரண்டு போன போலீசார்...!

ராஜஸ்தான் மாநிலம் ஏயூ வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார் வினீத் சிங் கவுர். இவர் தான் பணிபுரியும் வங்கியில் அதிகம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை குறி வைத்து, ஆட்களை ஏவி விட்டு கொள்ளை அடித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விஸ்வகர்மா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிகில் குப்தா என்பவர் ஏயூ வங்கியில் அடிக்கடி அதிக பணம் டெபாசிட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இவரின் பணத்தை கொள்ளையடிக்க விரும்பிய ஏயூ வங்கியின் மேலாளர் வினீத் சிங் கவுர் சேத்தன் சிங் மற்ற்ம் ரிஷி ராஜ் சிங் என்பவர்களை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி துப்பாக்கி வாங்கி வந்துள்ளார்.

அவர்களின் திட்டப்படி நிகில் குப்தாவும் கடந்த திங்களன்று வங்கிக்கு பணம் செலுத்த வந்துள்ளார். இந்நிலையில் நிகில் குப்தாவை, சேத்தன் சிங் மற்றும் ரிஷி ராஜ் சிங் மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். அத்துடன், அவரையும் சுட்டுக் கொன்றனர்.

அதையடுத்து இருவரும் வாகனத்துடன் காத்திருந்த கௌதம் சிங், அபய் சிங் மற்றும் ஐடன் சிங் ஆகியோரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவமானது அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

சிசிடிவி வீடியோவின் படி காவல்துறையினர் பணத்தை கொள்ளையடித்து மற்றும் கொலை செய்த 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.2.86 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை மற்றும் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த வங்கி மேலாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வங்கியை சேர்ந்தவர்களையும், அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்