நாளை உருவாகும் 'ஆம்பன்' புயல்... 'இந்த' பகுதிகள்ல எல்லாம்... 'மழைக்கு' வாய்ப்பு இருக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் நாளை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு அம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. 17 ஆம் தேதி வர வடமேற்கு திசையில் அதன் பிறகு வளைந்து வடக்கு வடகிழக்கு திசையிலும் நகரும். இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது' என்றனர்.
நாளை புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென்கிழக்கு அரபி கடல் போன்ற பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.