"ஃபர்ஸ்ட் டைம்.." 10 மாச குழந்தைக்கு ரெயில்வே வேலை.. 18 வருசம் கழிச்சு டியூட்டியில சேர்ந்துக்கலாம்.. "என்ன காரணம்.??"
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கரைச் சேர்ந்த 10 மாத குழந்தைக்கு ரெயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது தொடர்பான செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் யாதவ். இவரது மனைவியின் பெயர் மஞ்சு யாதவ். இந்த தம்பதியருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
பிலாய் பகுதியில் ரெயில்வே ஊழியர் ஆகவும் ராஜேந்திர குமார் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஜூன் மாதத்தில், தனது மனைவி மற்றும் மகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார் ராஜேந்திர குமார்.
10 மாத குழந்தைக்கு வேலை..
அப்போது, எதிர்பாராத விதமாக, ராஜேந்திர குமாரின் குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உள்ளனர். இதில், கணவர் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்து போன நிலையில், குழந்தை ராதிகா யாதவ் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதனைத் தொடர்ந்து, குழந்தை ராதிகா யாதவை அவரின் பாட்டி பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், கருணை அடிப்படையில், ராதிகாவுக்கு வேலை வழங்குவதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. தந்தை ராஜேந்திர குமார் வேலையில் இருக்கும் போது உயிரிழந்ததன் காரணமாக, அவரது மகளான ராதிகா, 18 ஆவது வயதில் வேலைக்கு சேருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில், பணி நியமனத்திற்கான பதிவும் கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.
"18 வயசு ஆனதும் சேர்ந்துக்கலாம்"..
அங்கிருந்த மூத்த அலுவலர் ஒருவர், ராதிகாவின் விரல் ரேகை பெற்று இதனை பதிவு செய்தார். அப்படி விரல் ரேகையை பதிவு செய்யும் போது, குழந்தையான ராதிகா அழுது கொண்டே இருந்துள்ளார். இதனால், அவரது ரேகையை பதிவு சற்று சிரமமாக இருந்தது என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்தியன் ரெயில்வே வரலாற்றில் 10 மாத குழந்தைக்கு பணி வழங்குவது இதுவே முதல் முறை. அந்த குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு, அவர் பணியில் சேர்க்கப்படுவார். அதன் பின்னர், ரெயில்வே துறையில் உள்ள சலுகைகள் அவருக்கு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read | "21 வருஷத்துக்கு அப்புறமா.." மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட முல்லா உமரின் கார்.. வைரலாகும் புகைப்படம்
மற்ற செய்திகள்