MKS Others

Railway jobs 2021: ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய ரயில்வேயில் தகுதியும் திறமையும் உடைய  விளையாட்டு வீரர்கள்  வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்  25.12.2021க்குள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் இந்திய ரயில்வேயின் Railand Development Authority-இல் நிரப்பப்பட உள்ள உதவி திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Railway jobs 2021: ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

விளம்பர அறிவிப்பு எண்:  SQ 2021-22 .

விளம்பரம் வெளியிடப்பட்ட தேதி: 26.11.2021

வேலையின் பெயர்: Clerk cum-Typist (Sports Quota)

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ. 5,200 -20,200

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

railway jobs for 2021: openings, qualifications and all details

விளையாட்டு தகுதி: அறிவிப்புகள் வெளியிட்டுள்ள விளையாட்டுகளில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொன்றில் பங்குபெற்று குறைந்தபட்சம் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.04.2019 பின்னர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கிடப்பட்டும். தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டு ஈடுபாட்டுடன் இருத்தல் கட்டாயம்.

railway jobs for 2021: openings, qualifications and all details

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcpry.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2021.

இதனிடையே   இந்திய ரயில்வேயின் Railand Development Authority-இல் நிரப்பப்பட உள்ள உதவி திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: உதவி திட்ட பொறியாளர் ( Assistant Project Engineer)

மொத்த பணியிடங்கள்: 45

ஊதியம்: மாதம் ரூ.35,000 - 54,600

வயதுவரம்பு: Railand Development Authority Assistant Project Engineer பணிக்கு  23.12.2021 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்,

railway jobs for 2021: openings, qualifications and all details

கல்வி தகுதி:  Railand Development Authority Assistant Project Engineer பணிக்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் Railand Development Authority Assistant Project Engineer பணிக்கு  தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rida.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து psecontract@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் மற்றொரு நகலை எதிர்கால பயன்பாட்டிற்காக கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

Railand Development Authority Assistant Project Engineer பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.rida.indianrailways.gov.in கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பாருங்கள்.

JOBS, INDIAN RAILWAYS, RAILWAY JOBS

மற்ற செய்திகள்