அமெரிக்கா வரை எதிரொலித்த ராகுல் காந்தி பேச்சு.. பாகிஸ்தான்-சீனா நட்பு பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலடி
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா குறித்து பேசிய விவகாரங்கள் அமெரிக்கா வரை பரவி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது:
தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய செய்திகள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் தமிழகம் தொடர்பாக நிறைய விஷயங்களை பேசினார். மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று பலமுறை தமிழகத்தை குறிப்பிட்டார்.
உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு 'நான் ஒரு தமிழன்' என்று பதில் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவிவருகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் பேசிய விவகாரங்கள் அமெரிக்கா வரை எதிரொலித்து வருகிறது.
இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்:
ராகுல் காந்தி அவரின் உரையில் 'இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம். உங்களின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது. இதுதான் தேசத்திற்கு எதிராக நீங்கள் செய்த மிகப்பெரிய குற்றம். இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்' எனக் கூறியிருந்தார்.
பாகிஸ்தானியர்களிடமும், சீனர்களிடமும் விட்டுவிடுகிறேன்:
இந்த நிலையில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக வெள்ளை மாநில செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம், 'இந்த விஷயம் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது. பாகிஸ்தானியர்களிடமும், சீனர்களிடமும் விட்டுவிடுகிறேன். அவர்களுக்கிடையே இருக்கும் உறவைப் பற்றி அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.
முக்கியமான உறவு நீடிக்கிறது:
இருந்தாலும், நான் ராகுல் காந்தியின் வார்த்தையை ஆதரிக்க மாட்டேன். இதுவரை அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிகவும் முக்கியமான உறவு நீடிக்கிறது. நாங்கள் எப்போதுமே 'எந்த ஒரு நாடும் அமெரிக்கா, சீனா என இரண்டில் ஒன்றின் சார்பாளராக இருக்க வேண்டும்' எனக் கூறியதில்லை.
அமெரிக்காவுடன் என்ன மாதிரியான உறவை வளர்ப்பது எங்களது நட்பை விரும்பும் நாடுகளின் முடிவில் விட்டுவிடுவோம். ஆனால், எங்களுடன் உறவை வளர்க்கும் நாடுகளுக்குக் கிடைக்கும் நன்மைகளும், சலுகைகளும் மற்ற நாடுகளின் உறவைத் தேர்ந்தெடுப்போருக்கு கிடைக்காது என்பது மட்டும் உறுதி' என சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.
பட்டப்பகலில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள்.. துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.1 கோடி கொள்ளை
மற்ற செய்திகள்