சிறுவனுடன் Push-up சேலஞ்ச்.. சாலையில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராகுல் காந்தி சிறுவன் ஒருவருடன் சாலையில் தண்டால் எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் எம்பியும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி கடந்த 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். தற்போது அவர் கர்நாடகாவில் நடைபயணத்தை அவர் தொடர்ந்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ள ராகுல் காந்தி, செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.
கர்நாடகாவில்
இந்நிலையில், தற்போது கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டுவருகிறார். இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். யாத்திரையின் போது, சிறுவன் ஒருவன் ராகுல் காந்தியை நெருங்கி அவருடன் பேசியபடி வந்திருக்கிறான். சிறுவனுடன் உரையாடியபடி நடந்த ராகுல் காந்தி, திடீரென சாலையில் சிறுவனுடன் தண்டால் எடுக்க முடிவெடுத்திருக்கிறார்.
இதனால் உற்சாகமடைந்த சிறுவன், உடனே தண்டால் எடுக்க ராகுல் காந்தியும் சாலையில் தண்டால் எடுத்திருக்கிறார். அவர் மட்டும் அல்லாது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோரும் இந்த திடீர் போட்டியில் கலந்துகொண்டனர். சிறிதுநேரம் தண்டால் எடுத்த ராகுல் காந்தி, பின்னர் எழுந்து சிறுவனை பாராட்டியபடி அங்கிருந்து நடந்து சென்றார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிறுவனுடன் போட்டிபோட்டு ராகுல் காந்தி தண்டால் செய்யும் வீடியோ கட்சியினர் மட்டும் அல்லாது பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மற்ற செய்திகள்