யாத்திரை நடுவே பாஜக தொண்டர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணத்தின்போது பாஜக தொண்டர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் எம்பியும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி கடந்த 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார். அதன்பிறகு கர்நாடகம், ஆந்திர பிரதேசம் வழியாக பயணம் மேற்கொண்ட அவர் பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ள ராகுல் காந்தி, செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.
தற்போது ராஜஸ்தானில் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து வரும் ராகுல் காந்தி நேற்று பாஜக அலுவலகம் அமைந்துள்ள பகுதி வழியாக நடந்து சென்றார். பாஜகவின் முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற பதாகைகள் அந்த அலுவலகத்தின் வாசல்களில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், அந்த கட்டிடத்தில் பாஜக தொண்டர்களும் நின்று ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.
சச்சின் பைலட் உள்ளிட்ட ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்து சென்ற ராகுல் காந்தி பாஜக தொண்டர்களை கண்டதும் புன்னகைத்தபடி கையசைத்தார். பின்னர், தொண்டர்களை நோக்கி ஃபிளையிங் கிஸ் கொடுக்க அங்கிருந்த அனைவரும் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்நிலையில் இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பாஜக தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
हम दिल जोड़ेंगे, संबंध जोड़ेंगे और भारत के हर एक वर्ग को जोड़कर दम लेंगे...🔥 pic.twitter.com/v05MlaRrIy
— Rajasthan Youth Congress (@Rajasthan_PYC) December 6, 2022
மற்ற செய்திகள்