'அவர் அப்பாவோட நெருங்கிய நண்பர்'... 'மரண வீட்டில் நெகிழ வைத்த ராகுல் காந்தி'... வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றது, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சர்மா(73) நேற்று முன்தினம் கோவாவில் காலமானார். இவர் 1993 - 1996 ஆம் ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.சதீஷ் சர்மாவின் மரணச் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி, நேராக அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து இறுதி மரியாதை செய்வதற்காக சதீஷ் சர்மா உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக, சதீஷ் சர்மா மறைவுக்கு ராகுல்காந்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
அதில், “கேப்டன் சதீஷ் சர்மா மறைந்ததைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அன்பும் இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அவரை மிஸ் செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.
மற்ற செய்திகள்