'Crorepati' நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 'அந்த' கேள்வி... நாடு முழுவதும் எழுந்த 'சர்ச்சை'... சிக்கலில் அமிதாப் பச்சன் ஷோ??!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வட இந்தியாவில் இந்தி மொழியில் ஒளிபரப்பட்டு வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும்.

'Crorepati' நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 'அந்த' கேள்வி... நாடு முழுவதும் எழுந்த 'சர்ச்சை'... சிக்கலில் அமிதாப் பச்சன் ஷோ??!

இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது மிகப் பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் '25 டிசம்பர் 1927 அன்று பி.ஆர். அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளை தீயிட்டு கொளுத்தினர்?' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு மனு ஸ்மிருதி என்ற சரியான விடையை போட்டியாளர் தெரிவித்தார். இந்த கேள்விக்கு ஆப்சன்களாக வழங்கப்ட்ட நான்கும் இந்து மதத்தின் புனித நூல்களாகும். இதனால் இது இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் உள்ளதாக பலர் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், இப்படி கேள்வி கேட்பது சிறுவர்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, லக்னோவை சேர்ந்த அனைத்திந்திய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் திரிவேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்துக்கு உரியது என்றும், இப்படி சமூகத்தில் சாதி ரீதியிலான வேற்றுமைகளை ஏற்படுத்தியதற்காக அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சேனல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்