புரெவி புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து 24 மணி நேரத்தில் வலுவடைந்து புரெவி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வலுக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் சூழ்நிலையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதாகவும், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடவுள் செல்ல வேண்டாம் என்றும் கூறிய வானிலை ஆய்வு மையம் தென் தமிழக மற்றும் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
அத்துடன் இலங்கையில் புயல் கரையை கடந்தாலும் குமரிக்கடல் பகுதி வரையில் நீடிக்கும் என்றும் இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் சார்பாக புவியரசன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்