"இத்தன 'வருஷம்' நாங்க பட்ட கஷ்டத்துக்கு இப்போ 'பதில்' கெடச்சுருக்கு..." கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த 'அதிர்ஷ்டம்'!. ஒரே நாளில் மாறிய 'வாழ்க்கை'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபல வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு வந்த குடும்பம் ஒன்றிற்கு, ஒரே நாளில் மிகப் பெரிய அதிர்ஷ்டமடித்ததால் திக்கு முக்காடிப் போயுள்ளனர் அந்த குடும்பத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கு, லாட்டரி விற்பனை மூலம் அதிக வருமானமும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த ரேணு சவுகான் என்ற பெண்மணி, 100 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் ஒன்றை சில தினங்களுக்கு முன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து, ரேணு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை பஞ்சாப் மாநில லாட்டரி விற்பனைத் துறை, தற்போது வெளியிட்டுள்ளது. இந்த குலுக்கல் முடிவில், ரேணு சவுகான் வாங்கிய D-12228 என்ற எண்ணிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த டிக்கெட்டை வாங்கியவர்கள், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, மாநில லாட்டரி விற்பனை துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின், தகுந்த ஆவணங்களையும் ரேணு சவுகான் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்துள்ளதால் ஆச்சரியத்தில் உறைந்தே போயுள்ளார் ரேணு சவுகான். தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது குறித்து பேசிய ரேணு சவுகான், 'இத்தனை பெரிய தொகை எனக்கு பரிசாக விழுந்ததை நம்பவே முடியவில்லை. நானும், எனது குடும்பமும் இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் தற்போது கண்ணை திறந்துள்ளார்' என ரேணு உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
மேலும், தனக்கு கிடைத்துள்ள பரிசுத் தொகையைக் கொண்டு, துணி வியாபாரம் செய்து வரும் தனது கணவரின் வர்த்தகத்தை விரிவுபடுத்தவுள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினரைச் சேர்ந்த தனக்கு இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் ரேணு சவுகான் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்