Veetla Vishesham Mob Others Page USA

"16 வயது முஸ்லீம் பெண்ணின் திருமண விவகாரம்.!" - பரபரப்பில் ஆழ்த்திய உயர்நீதிமன்ற உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் முஸ்லிம் தம்பதியரின் ஒரு மைனர் திருமணத்தை அங்கீகரித்துள்ள விஷயம் பரபரப்பாகி இருக்கிறது.

"16 வயது முஸ்லீம் பெண்ணின் திருமண விவகாரம்.!" - பரபரப்பில் ஆழ்த்திய உயர்நீதிமன்ற உத்தரவு!

Also Read | "அதுங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி"..எல்லா வீட்டுலயும் நல்ல பாம்பு.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒன்று, தங்களுடைய பெற்றோரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இந்த தம்பதியரில் மணமகனுக்கு 21 வயது நிறைவு பெற்று இருப்பதாகவும், இந்த தம்பதியின் திருமணத்துக்கு பிறகு பெற்றோர்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்களின் மனுவில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனு விவகாரத்தில் மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே ஆகியிருந்ததால், தனித்துவமான மனுவாக இது பார்க்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, ஒற்றை அமர்வு ஒன்றை அமைத்து, தம்பதியர் மற்றும் பெற்றோர் ஆகியோரது வாதங்களை கேட்டு இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

அதன்படி, மணப்பெண் 18 வயதை எட்டாத மைனர் என்று ஒரு பக்கம் வாதிடப்பட்டது. இன்னொரு புறம் இந்த திருமணத்தில் பெற்றோருக்கு துளியும் விருப்பம் இல்லை என்கிற தகவல் முன்மொழியப்பட்டது. அதேசமயம் இவற்றையெல்லாம் விசாரித்த நீதிபதி, இந்த முஸ்லிம் தம்பதியினரின் மைனர் திருமணம் செல்லும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறார்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக மனுதாரர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில், அந்த தம்பதியர், இந்திய அரசியலமைப்பின்படி அவர்களின் அடிப்படை உரிமைகளை கோருவதாகவும் எனவே அந்த அடிப்படை உரிமையை பறிக்க முடியாது என்றும் ஒற்றை அமர்வு நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

Punjab Haryana HC upholds 16-Year-Old Muslim Girl marriage

அத்துடன் இஸ்லாமிய ஷரியா விதியை மேற்கோள் காட்டிய அவர், தனிநபர் சட்டத்தால் முஸ்லிம் திருமணம் என்பது நிர்வகிக்கப்படுகிறது என்றும்,  சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் 'முஹம்மதின் சட்டத்தின் கோட்பாடுகள் புத்தகத்தின் பிரிவு 195-ன் படி, மணப்பெண் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்ணாக இருக்கும்போது அவர் விரும்பும் நபருடன் அவர் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கு தகுதியுடையவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 20 வயதுக்கு மேற்பட்டவராக மணமகன் இருப்பதால் இந்த மனுதாரர்கள் இருவரும் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயது உடையவர்கள் என்பதுடன் இவர்களின் அச்சத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது கூடுதல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுளார்.

Also Read | உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்.. ‘மீண்டும் உயிர் பெறலாம்’ என மூட நம்பிக்கையா.?

MUSLIM GIRLS OVER 15 YEARS CAN MARRY, PUNJAB AND HARYANA HIGH COURT, COURT UPHOLDS 16-YEAR-OLD MUSLIM GIRLS MARRIAGE

மற்ற செய்திகள்