உங்க பையன் பாக்கெட்டுல 'ஆணுறை' இருந்துச்சு... கோபப்பட்ட 'தந்தை'... உருக்கமான கடிதத்துடன்... இளைஞர் எடுத்த 'சோக' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலம், அம்ரித்சர் பகுதியை சேர்ந்தவர் அங்கித். இவர் இந்தாண்டு +2 முடித்துள்ளார். இந்நிலையில், அங்கித் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

உங்க பையன் பாக்கெட்டுல 'ஆணுறை' இருந்துச்சு... கோபப்பட்ட 'தந்தை'... உருக்கமான கடிதத்துடன்... இளைஞர் எடுத்த 'சோக' முடிவு!

அப்போது அங்கித்தை பிடித்த போலீசார், அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் அவரை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள இளைஞரின் தந்தையின் கடைக்கு போலீசார் சென்றுள்ளனர். உங்களது மகன் கையில் ஆணுறை வைத்திருந்த நிலையில் தங்களிடம் சிக்கியதாக அங்கித்தின் தந்தையிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தனது மகன் மீது குற்றம் சுமத்தியதால் கோபமடைந்த அங்கித்தின் தந்தை போலீசார் முன்னிலையில் அவரைத் திட்டியுள்ளார். தன் மீது தவறான புகார் செலுத்தி, அதனால் தந்தை தன்னிடமே கோபமடைந்த காரணத்தால் விரக்தியடைந்த அங்கித், வீட்டிற்கு சென்ற நிலையில் தூக்கில் தொங்கி சோக முடிவை எடுத்துள்ளார். அங்கித் தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதத்தில், 'அப்பா, நான் எந்த தவறையும் செய்யவில்லை. அந்த போலீஸ் அதிகாரிகள் உங்களிடம் பொய் சொன்னார்கள். ஆனால் அதனை நம்பி நீங்கள் என்னிடம் கோபப்பட்டு விட்டீர்கள். ஆனால் அந்த ஆணுறை எங்கிருந்து வந்தது என்பது எனக்கே தெரியவில்லை. ஃபை அப்பா, அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் உங்களையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்டு துடித்துப் போன அவரின் தந்தை, உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகாரளித்துள்ளார். மேலும், மகனை அழைத்துக் கொண்டு கடைக்கு வந்த போது அந்த போலீஸ் அதிகாரிகள் சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், அபராத தொகையை அதிகமாக வசூலித்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.

இளைஞர் மீது போலீசார் தவறான குற்றம் சுமத்தியதால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்