இரவு தாமதமா வர்ற பெண்கள் 'இந்த அற்புத சேவையை' பயன்படுத்திக்கலாம்.. இதயம் வென்ற மாநில அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புதிய அரசு சேவையினை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், தம் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

இரவு தாமதமா வர்ற பெண்கள் 'இந்த அற்புத சேவையை' பயன்படுத்திக்கலாம்.. இதயம் வென்ற மாநில அரசு!

ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு முன், பணி முடிந்து வீடு திரும்பிய பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டியின் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கியதை அடுத்து, நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதாங்களும், கருத்துக்களும் பலவேறு தரப்பிலும் எழுப்பப் பட்டன.

அதன்படி, இரவு நேரம் தாமதமாக வீடு திரும்பும் பெண்கள் உதவி தேவைப்பட்டால், 100, 112, 181 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும், அவ்வாறு தொடர்பு கொண்டால் போலீஸ் வாகனத்தில், வீடு வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், அவர்களுடன் போலீஸார் ஒருவர் கூடவே வந்து பாதுகாப்பாக அவர்களை வீட்டில் சேர்த்துவிட்டு கிளம்புவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர கதியில் வாகனங்கள் எதுவும் கிடைக்காத சூழலில் இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை, பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் பெண்கள் வீடு சென்று சேர இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறி பஞ்சாப் முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

WOMENSAFETY, PUNJAB