தன்னைவிட 16 வயது குறைந்த மணப்பெண்.. விமரிசையாக நடந்து முடிந்த பஞ்சாப் முதல்வரின் திருமணம்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருப்பவர் பகவந்த் மான். இவர்தான் இன்று மருத்துவப் பணியாற்றும் பெண் ஒருவரை திருமணம் செய்து இருக்கிறார்.

தன்னைவிட 16 வயது குறைந்த மணப்பெண்.. விமரிசையாக நடந்து முடிந்த பஞ்சாப் முதல்வரின் திருமணம்.!

Also Read | "நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரகூடாது.." 10 வருஷமா துடைப்பம் வித்த காசு.. 100 வயசு'லயும் சபாஷ் போட வைத்த முதியவர்

48 வயதான ஆம் ஆத்மி கட்சி தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமானவர் பகவந்த் மான். தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தன. இதனை தொடர்ந்து சீக்கிய மதத்தைச் சேர்ந்த இவர், அதே மதத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் கவுர் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதன்படி சீக்கிய முறையில் இவருடைய திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரத்தின் போதுதான் பகவந்த் மான்,   குர்ப்ரீத் கவுரை சந்தித்திருக்கிறார். நான்காண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சில தலைவர்கள் பங்கேற்க, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சூழ்ந்த நிலையில் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

Punjab Chief Minister Bhagwant Mann married Gurpreet Kaur

முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு பகவந்த் மானுக்கு அவருடைய முதல் மனைவியுடன் விவாகரத்து நிகழ்ந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 2 மகன்கள் இருக்கின்றனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் தங்களுடைய தாயாருடன் வசித்து இருப்பதாக தெரிகிறது.

Punjab Chief Minister Bhagwant Mann married Gurpreet Kaur

இந்த நிலையில்தான், 48 வயதான பகவந்த் மான், தற்போது 32 வயதான குர்ப்ரீத் கவுரை 2வதாக திருமணம் செய்திருக்கிறார். அதன்படி பகவந்த் மானை விட குர்ப்ரீத் கவுர் 16 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தல தோனிக்கு வாழ்த்து சொன்ன தளபதி ஸ்டாலின்.. ஃபேன்ஸ் மாதிரி ஆவலுடன் இருக்கும் தமிழக முதல்வர்.. வைரல் ட்வீட்

PUNJAB CHIEF MINISTER, BHAGWANT MANN MARRIED GURPREET KAUR, PUNJAB CHIEF MINISTER BHAGWANT MANN, BHAGWANT MANN GURPREET KAUR MARRIAGE

மற்ற செய்திகள்