'பேக் ஐடி-ய கண்டுபிடிக்க ஒரே வழி...' 'நாம பேக் ஐடி-யா மாறணும்...' 'பணக்கார ஆண்களை வீழ்த்த...' - தூக்க மாத்திரைகளோட செல்லும் பெண்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனேவை சேர்ந்த பெண் ஒருவர் டேட்டிங் செயலி மூலம் ஆண்களை ஏமாற்றி பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
டேட்டிங் செயலி மூலம் ஏமாந்த 4 பேர் அப்பெண்ணின் மோசடி குறித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணை குறித்து எந்த தகவலும் தெரியாத காரணத்தால் இந்த வழக்கு காவல்துறைக்கே சவாலாக இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த பெண்ணின் ரூட்டையே காவல்துறையினரும் பின்பற்றி டேட்டிங் ஆப் மூலம் போலியான புரொபைல் ஒன்றை உருவாக்கி மோசடி செய்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், புனேவில் உள்ள ராதிகா அப்பார்ட்மென்டில் வசித்து வரும் 27 வயதான சயாலி அலியாஷ் தேவேந்திர காலே (Sayali alias Shikha Devendra Kale) என்பது தெரியவந்ததுள்ளது. மேலும் நல்லா படித்த குடும்பத்தை சேர்த்த சயாலி, கடந்த ஆண்டு வரை ஐ.டி கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ள சயாலி, கொரோனா காரணமாக பணியை இழந்துள்ளார்.
இதனால் செலவிற்கு பணம் இல்லாமல் தவித்து வந்த சயாலி அலியாஷ், ஆண்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார். மேலும் சயாலியின் தாய் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை கொண்டு, டேட்டிங் ஆப் மூலம் பணக்கார ஆண்களை தன் வலையில் வீழ்த்துவதை குறிக்கோளாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு சிக்கும் ஆண்களுடன் தனியாக அறையில் தங்கும் அவர், தான் எடுத்துச்செல்லும் தூக்க மாத்திரைகளை மதுபானங்களில் கலக்கி டேட்டிங் வருபவர்களை மயக்கமடைய செய்து அவர்களிடமிருக்கும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
விசாரணையில் சயாலி தன்னுடைய குற்றங்களையும் ஒத்துக்கொண்டுள்ளார். அதன்பின் சயாலியிடம் இருந்து 15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய புனே காவல்துறை, IPC 328, 379 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளது.
மற்ற செய்திகள்