அப்பாடா...! 'ஒருவழியா லைசன்ஸ் எடுத்தாச்சு...' 'ஆசையோட வந்து ஃபோட்டோவ பார்த்தவருக்கு...' - காத்திருந்த மொரட்டு ஷாக்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவுசெய்து பயிற்சி ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்ரே தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், புனேவேச் சேர்ந்த ஆசிஷ் செடே என்பவர், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அன்று காலை 11 மணியளவில் Parivahan Sewa இணையதளத்தில் தனது ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுநர் உரிமம் பெற பதிவேற்றி அதனுடன் ரூ.365ஐ கட்டணமாகவும் செலுத்தி இருக்கிறார். பிறகு பயிற்சி தேர்வுக்கு சென்றதில் 15க்கு 9 மதிப்பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் லைசன்ஸ் கையில் கிடைத்தபோது அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதன்பிறகு அவருக்கு இணையதளத்திலிருந்து உடனடியாக பயிற்சி ஓட்டுநர் உரிமம் கிடைத்திருக்கிறது. ஆனால் உரிமம் கிடைக்கப்பெற்றபோது அதில், அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததால் அவர் உடனடியாக புனே ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்திருக்கிறார்.
இதுகுறித்து செடே கூறுகையில், ’’இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதுதான். ஆனால் என்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததால் அதற்காக நான் சற்று அலையவேண்டி இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ அலுவலர் கூறுகையில், இணையதளம் இயங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு எதுவுமில்லை. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேர்க்கும்போது ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். ஆனால் மொபைல் எண் இணைத்திருக்கும் ஆதார் கார்டுகளை கொண்டவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்