கொரோனாவோட அடுத்த ஹாட்ஸ்பாட்... இந்த 'ரெண்டு' சிட்டி தான்... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவை முடக்கி போட்டிருக்கும் கொரோனாவால் மீண்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாட்டை பொறுத்தவரை மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்களாக திகழ்ந்தன. தமிழகத்தை பொறுத்த மட்டில் சென்னை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டெழ ஆரம்பித்து உள்ளது.

கொரோனாவோட அடுத்த ஹாட்ஸ்பாட்... இந்த 'ரெண்டு' சிட்டி தான்... வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்களாக புனே, பெங்களூர் ஆகிய நகரங்கள் இருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டைம்ஸ் பேக்ட்-இந்தியா தொற்றுநோய் அறிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ''இந்தியாவில், கொரோனா மீட்பு விகிதம் 64.54% என்ற அளவில் உள்ளது. புனே, தானே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நோய் பரவல் மற்றும் சிகிச்சைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது,'' என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்