‘மறக்க முடியாத புல்வாமா தாக்குதல்’!.. ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்க வைத்த போட்டோ.. இப்போ இவங்க என்ன பண்றாங்க..? இந்திய ராணுவம் வெளியிட்ட உணர்ச்சிகரமான வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்துள்ள சம்பவம் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மறக்க முடியாத புல்வாமா தாக்குதல்’!.. ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்க வைத்த போட்டோ.. இப்போ இவங்க என்ன பண்றாங்க..? இந்திய ராணுவம் வெளியிட்ட உணர்ச்சிகரமான வீடியோ..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 30-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தீவிரவாத தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தியாகத்தை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு 2019-ம் ஆண்டு ஷவுர்யா சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Pulwama martyr's wife Nikita Kaul joins Indian Army

இந்த நிலையில் மேஜர் சங்கர் தூந்துயாலின் மனைவி நிக்கிதா கவுல் தற்போது ராணுவத்தில் இணைந்துள்ளார். ராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை முடித்த அவர், இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜென்ரல் ஒய்.கே. ஜோஷியிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். இதனை ராணுவ அமைச்சகம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அந்தப் பதிவில் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளது. அதில் ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வரும் நிக்கிதா, ஸ்டார்களை தனது தோளில் பெற்றுக்கொள்கிறார்.

Pulwama martyr's wife Nikita Kaul joins Indian Army

திருமணமான 9 மாதங்களில் தனது கணவரான மேஜர் சங்கரை இழந்த நிக்கிதா, சோர்ந்துவிடாமல் உடனடியாக ராணுவத்தில் சேர்வதற்கான வேலைகளில் இறங்கினார். முதலில் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதித் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்ற அவர், நேர்முக தேர்விலும் தகுதிப்பெற்றார். இதனை அடுத்து சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் தன்னுடைய பயிற்சியை தொடங்கினார். இப்போது ராணுவ அதிகாரியாக கணவரைப் போலவே நாட்டுக்காக சேவையாற்ற நிக்கிதா கவுல் வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்