‘உங்கள் வீரமரணத்தை இந்த தேசம் ஒரு போதும் மறக்காது’... ‘புல்வாமா’ தாக்குதல் நடந்து ‘ஓராண்டு’ நிறைவு...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரமரணம் அடைந்ததை இந்த தேசம் ஒருபோதும் மறக்காது என பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

‘உங்கள் வீரமரணத்தை இந்த தேசம் ஒரு போதும் மறக்காது’... ‘புல்வாமா’ தாக்குதல் நடந்து ‘ஓராண்டு’ நிறைவு...

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு 78 பேர் பேருந்துகளில் துணை ராணுவப் படையினர் சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவந்தி போரா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் காரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பிப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கொடூர சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் மோடி ட்விட்டரில், “கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலில் தங்கள் இன்னுயிரை நீத்த துணிச்சல் மிக்க சிஆர்பிஎப் வீரர்களுக்கு என் அஞ்சலிகள். அவர்கள் நம்முடைய தேசத்தை காக்கவும், சேவை செய்யவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தனித்துவம் மிக்கவர்கள். இந்த தேசம் ஒருபோதும் அந்த வீரர்களின் வீரமரணத்தை மறக்காது” என நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.