"LKG, UKG -க்கு ரூ‌.50 ஆயிரம், 1 லட்சமா‌?".. புதுச்சேரி முதல்வர் சொல்லும் மாற்றுவழி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, சில பெற்றோர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு கூட அதிக கட்டணம் செலவழித்து வருவது குறித்து ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

"LKG, UKG -க்கு ரூ‌.50 ஆயிரம், 1 லட்சமா‌?".. புதுச்சேரி முதல்வர் சொல்லும் மாற்றுவழி..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | கனவுக்கு தடைபோட்ட வீல் சேர்...! ஆனாலும் அசரலயே.. உலக நாடுகளை சுற்றும் இளம்பெண்.. நெகிழ்ச்சி பின்னணி..  

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்,"தற்போதைய சூழலில் அதுவும் கொரோனா காலங்களை கடந்து மாணவர்கள் பட்டம் பெறுவது சவாலான காரியம் தான். இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆகப்பெரும் சவால் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒவ்வொரு மாணவரும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களது தியாகத்தால் தான் இங்கே நீங்கள் அனைவரும் அமர்ந்திருக்கிறீர்கள்.

Puducherry CM speech about people spend 50k to 1 Lakh for Kindergarden

Images are subject to © copyright to their respective owners.

"தாய், தந்தையரின் தியாகமும் கணக்கில் அடங்காதது. பலருக்கும் மறுக்கப்பட்ட வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. நமக்கு கிடைத்த வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். திட்டமிட்டு எதிர்கால இலக்குகள் எது என கண்டறிந்து அவை நோக்கி நம்முடைய பாதைகள் வகுக்கப்பட வேண்டும்" என்றார். ஆறு வயது நிரம்பிய குழந்தைகள் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என வெளியான தகவல் குறித்து பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பல வளர்ந்த நாடுகளிலும் இத்தகைய விதிமுறைகளை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை புதுச்சேரி அரசு சிறப்பாக வழங்கி வருவதாகவும் பாராட்டினார்.

Puducherry CM speech about people spend 50k to 1 Lakh for Kindergarden

Images are subject to © copyright to their respective owners.

இதனை அடுத்து பேசிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி,"புதுச்சேரியில் அன்று ஒரே ஒரு கல்லூரி மட்டுமே இருந்தது. ஆனால் இன்று எத்தனை மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி கல்லூரிகள் இருக்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். 16 பட்ட மேற்படிப்பு, 8 ஆராய்ச்சி பிரிவுகள் இருப்பது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பெண்கள் அதிக அளவில் தங்கப் பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளனர். பாரதிதாசனின் வரிகளின் படி புதுச்சேரியில் பெண் கல்வி எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.

Puducherry CM speech about people spend 50k to 1 Lakh for Kindergarden

Images are subject to © copyright to their respective owners.

"எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற பாடத்தை எடுத்துப் படிக்கின்ற வாய்ப்பு உருவாக வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். எல்கேஜி, யுகேஜி படிப்புக்கு ரூபாய் 50,000 , ஒரு லட்சம் வரை சில பெற்றோர்கள் செலவிடுகின்றனர். அதை நினைக்கும் போது அதெல்லாம் தேவையா? என தோன்றுகிறது. புதுச்சேரியில் என்ன இல்லை? பல அரசு பள்ளிகள், கல்லூரிகள் துவங்கியுள்ளோம். உயர்கல்வி பெறுவதற்கு காமராஜர் கல்வி திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து கட்டணங்களையும் நாம் கொடுக்கின்றோம். ஆனால் பல பெற்றோர்கள் தனியார் நிறுவனங்களிடம் பணத்தை செலவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு கல்லூரியில் படித்து பட்டம் பெறும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

Also Read | குறையொன்றுமில்லை.. மனமகிழ்ச்சியுடன் மணமுடித்த மாற்றுத் திறனாளி தம்பதிகள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

PUDUCHERRY CM, PUDUCHERRY CM SPEECH, KINDERGARDENS

மற்ற செய்திகள்