'எங்களை சீரழிச்சிட்டாங்க மேடம்'... 'நம்பிக்கையோடு சொன்ன பெண்கள்'... நான் உங்க கூட இருக்கேன்னு 'எஸ்.ஐ' வச்ச ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎங்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்கள் என, இளம் பெண்கள் புகார் கொடுத்த நிலையில், பெண் எஸ்.ஐ செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இருப்பவர் கேனல் ஷா. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண்கள், தங்களை கேனல் ஷா, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருக்கும் சுவேதா ஜடேஜா என்பவர், புகாரைப் பெற்றுக் கொண்டு நான் உங்களோடு இருக்கிறேன், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
அவரும் பெண் தானே நமது நிலைமை அவருக்குப் புரியும் என அந்த இளம் பெண்கள் இருவரும் நம்பிக்கையோடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அப்பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை அவர் கைது செய்யாமல் இருந்துள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாகப் பெற்றுள்ளார்.
அதோடு ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுவேதா, கேனல் ஷா தரப்பை மிரட்டி வந்துள்ளார். இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கசிந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சுவேதாவை கைது செய்தனர்.
அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவலை அறிந்த பதிக்கப்பட்ட இளம் பெண்கள் அதிர்ந்து போனார்கள். இதற்கிடையே இரு பெண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில், சுவேதா விசாரித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்