'வந்த வழிய பாத்து போங்க'.. 'குழந்தைகளை இழந்து'.. 'கொந்தளிக்கும் மக்கள்'.. பரவிவரும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகாரின் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 108-க்கும் மேலான குழந்தைகள் இறந்துள்ள சோக சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வந்த வழிய பாத்து போங்க'.. 'குழந்தைகளை இழந்து'.. 'கொந்தளிக்கும் மக்கள்'.. பரவிவரும் வீடியோ!

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சென்று சேராததாலும், இந்நோயினால் உயிர் பலி அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையிலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பலனின்றி குழந்தைகள் இறந்துள்ளனர். இறந்த குழந்தைகளின் சடலங்களும் இம்மருத்துவமனையில் இருக்கின்றன.

இதனால் இந்த காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கப்படாததற்கும், தகுந்த சிகிச்சை அளிக்கப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, முசாபர்பூர் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் கிளம்பியுள்ளது. இதேபோல் இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்ததோடு, முசாபர்பூரின் எஸ்.கே.எஸ்.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்வையிடச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவரின் வருகையை எதிர்த்து, கருப்புக்கொடி காட்டியும், திரும்பிப் போகச் சொல்லியும் போராட்டக் காரர்கள் கோஷமிட்டதால் அவர் திரும்பிச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

PROTEST, BIHAR