'மரணதண்டனை' உறுதி.. நேற்றிரவே என்கவுண்டர் குறித்து.. 'க்ளூ' கொடுத்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரியங்கா ரெட்டி வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதை ஹைதராபாத் போலீஸ் முன்பே தெரிவித்து உள்ளனர். இதுகுறித்த ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது இந்தியா முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து இன்று காலை கைது செய்யப்பட்ட நால்வரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் என்கவுண்டர் குறித்து ஹைதராபாத் போலீசார் முன்கூட்டியே தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
When last night @cyberabadpolice said "working hard to ensure capital punishment to all the accused", nobody had a clue that the @cyberabadpolice itself will execute it and they are the law pic.twitter.com/uibbuAiCz1
— Ravi Nair (@t_d_h_nair) December 6, 2019
நெட்டிசன் ஒருவர் ஹைதராபாத் போலீசாரை ட்விட்டரில் டேக் செய்து கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். நேற்றிரவு சுமார் 11.35 மணிக்கு ஹைதராபாத் போலீசார் அதற்கு பதில் அளித்து இருந்தனர். அதில்,'' இது தவறான தகவல். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒருவர் முஸ்லீம், மீதமுள்ள 3 பேர் இந்துக்கள். இது ஒரு கொடூரமான குற்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையை உறுதிப்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். தயவுசெய்து குற்றத்திற்கு மத சாயம் பூச வேண்டாம்.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம்,'' என தெரிவித்து இருந்தனர். நெட்டிசன் தன்னுடைய ட்வீட்டை டெலீட் செய்து விட்டதால் அவர் என்ன கேள்வியை எழுப்பினார்? என்பது தெரியவில்லை. ஆனால் என்கவுண்டர் குறித்து போலீசார் முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.