தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் பள்ளி கல்விக்கட்டணம் குறைக்கப்படுமா? என்ற கேள்விக்கான பதில் தற்போது வெளியாகி இருக்கிறது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போதைய சூழலில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இது தொடர்பாக சென்னை, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய நகரங்களைச் சேர்ந்த முன்னனி தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி அக்டோபர் மாதம் முதல் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளை திறப்பதும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்வது கடினம் என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி பெறக்கூடிய நிலை உள்ளதால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது. சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைப்பது, வீடுகளில் இருந்தவாறே பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
80 சதவீத மாணவர்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு செல்வதால் தற்போதைய நிலையில் கல்விக் கட்டணத்தை குறைப்பது சாத்தியமில்லை என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
மற்ற செய்திகள்