பிரசவ வலியால் 4 மணி நேரம் துடித்த கர்ப்பிணி.. டாக்டர்கள் வராததால் குழந்தையை இழந்த அவலம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் 4 மணி நேரம் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி மருத்துவர்கள் வராததால் குழந்தையை இழந்துள்ளார்.
சமீனா என்ற அந்தப் பெண் கோலாரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கணவர் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். காலியாக இருந்த மருத்துவமனை வளாகத்தில் அவரைத் தரையில் உட்கார வைத்துள்ளனர் உறவினர்கள். மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என யாருமே வராததால் அவர் சுமார் 4 மணி நேரம் வலியில் துடித்துள்ளார்.
நேரம் செல்லச் செல்ல வலி தாங்க முடியாமல் போக அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு தாமதமாக வந்ததால் அங்கு சமீனாவை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. மருத்துவர்களால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் ஊடகத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீனா வலியால் துடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமீனாவின் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
Absolutely appalling incident in Kolar: shocking video of woman writhing in labor pain, hospital staff and doctors remain apathetic as she was made to wait for 4 hours!! pic.twitter.com/q7gWC9CNfn
— Nimi (@nimeshika_j) May 29, 2019