‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவால் தனது 8 மாத கர்ப்பிணி மனைவுடன் வாலிபர் ஒருவர் 100 கிலோமீட்டர் நடந்து வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்தாகர் என்ற இடத்தை சேர்ந்தவர் வகீல். இவரது மனைவி யாஸ்மின். வகீல் தனது மனைவுடன் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டை காலி செய்ய தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளது.
வகீலின் மனைவி யாஸ்மின் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் வீட்டை காலி பண்ண சொன்னதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். ஆனால் ஊருக்கு செல்ல பேருந்து ஏதுமில்லாததால், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களை நிறுத்த கை காட்டியுள்ளனர். ஆனால் வாகனங்கள் ஏதும் நிற்காததால், இருவரும் நடந்து ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக சுமார் 100 கிலோமீட்டர் நடந்தே மீரட் பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளனர். கையில் பணம் இல்லாததால் சாப்பிடாமலேயே நடந்து வந்துள்ளனர். இதனால் இருவரும் பேருந்து நிலையம் அருகே சோர்வாக அமர்ந்து இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அருகில் இருந்தவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு கொடுத்துள்ளனர். அப்போது அங்கே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பெரம்பல்சிங் என்பவர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்கள் இருவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.